இந்தியா - வியட்நாம் இடையே நேற்று ( நவ.25) அன்று கல்வி, அறிவியல் ஆராய்ச்சி ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தக் கூட்டம், நாட்டின் தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.
இந்தியா - வியட்நாம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!
டெல்லி: இந்தியா - வியட்நாம் இடையே கல்வி உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் கையெழுத்தானது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கூட்டம்
இந்த ஒப்பந்தக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வியாட்நாம் ராணுவத்தின் முக்கிய அலுவலர் ஃபான் வான் கியான், பாதுகாப்பு கல்வி நிறுவனத்தின் அதி நவீன தொழில் நுட்பத்தைச் சேர்ந்த துணைத் தலைவர் சி.பி. ராமநாராயணன், வியட்நாம் ராணுவ தொழில்நுட்ப அகாடமியைச் சேர்ந்த காங் தின் ஆகியோர் பங்கு பெற்றனர்.
மேலும் படிக்க: காவல் படையில் சேர்ந்த 6 நாய்கள் - குளோனிங் முறையில் தயாரித்து அசத்திய சீனர்கள்!