தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ஜனநாயகத்தை நிலைநிறுத்துங்கள்'- மியான்மர் ராணுவத்திற்கு இந்தியா அறிவுறுத்தல் - ஆங்க் சான் சூகி ராணுவத்தினரால் கைது

மியான்மரில் சட்டம் ஒழுங்கைச் சீரமைத்து ஜனநாயகத்தை நிலைநிறுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

Myanmar
Myanmar

By

Published : Feb 1, 2021, 11:28 AM IST

மியான்மரில் நிலவிவரும் அரசியல் பதற்றநிலை குறித்து வெளியுறத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அந்நாட்டில் நிலவும் சூழல் இந்தியாவுக்கு வருத்தம் அளிக்கிறது. அங்கு சட்டம் ஒழுங்கைச் சீரமைத்து ஜனநாயகத்தை நிலைநிறுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக, மியான்மரில் ராணுவப் புரட்சி ஏற்பட்டு ஓராண்டுக்கு அவசரநிலையை அந்நாட்டு ராணுவம் பிரகடனப்படுத்தியுள்ளது. மியான்மர் தலைவரும், அந்நாட்டு அரசின் ஆலோசகருமான ஆங் சான் சூகி, ராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவசரநிலை அறிவிப்பையடுத்து அந்நாட்டின் ஆட்சி அதிகாரம் ஓராண்டு ராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் என ராணுவம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:நேபாளம்: தீராத நெருக்கடியில் உள்ள நாடு

ABOUT THE AUTHOR

...view details