இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினந்தோறும் 80 ஆயிரத்தைத் தாண்டுகிறது. அதே சமயம், கரோனாவிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
உலக அளவில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் பட்டியலில் இந்தியா முதலிடம் - அமெரிக்க பல்கலைக்கழகம்! - ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்
வாஷிங்டன் : உலக அளவில் கரோனா தொற்றிலிருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களின் பட்டியலில் இந்தியர்கள் முதலிடம் வகிப்பதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 77 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 37 லட்சத்து 80 ஆயிரம் பேர் கரோனாவிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளனர். கரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கும் குணமடைந்தவர்களுக்கும் வித்தியாசம் குறைந்த அளவிலே உள்ளது. குணமடைந்தோர் பட்டியலில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர் தான் 60 சதவிகிதம் உள்ளனர் " எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில், உலக அளவில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். அங்கு 37 லட்சத்து 80 ஆயிரத்து 107 பேர் குணமடைந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக பிரேசிலில் 37 லட்சத்து 23 ஆயிரம் பேரும், அமெரிக்காவில் 24 லட்சத்து 51 ஆயிரம் பேரும் குணமடைந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர்.