சர்வதேச நாணய நிதியத்தின் இந்த ஆண்டுக்கான சந்திப்பு வாஷிங்டனில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "2024ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை ஐந்து லட்சம் கோடி ரூபாயாக மாற்ற வேண்டும். உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குவது எங்கள் லட்சியம். கடந்த 10 ஆண்டுகளில் உள்கட்டமைப்புக்காக 1.1 ட்ரில்லியன் டாலரை செலவழித்துள்ளோம்.
அடுத்த ஐந்தாண்டுகளில் 1.4 ட்ரில்லியன் டாலரை உள்கட்டமைப்புக்காக செலவழிக்க உள்ளோம். உள்கட்டமைப்பின் முதலீட்டை அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். பொது தனியார் கூட்டு பங்களிப்புத் திட்டத்தை நாடு முழுவதும் நிறைவேற்றியுள்ளோம். தற்போதுள்ள உள்கட்டமைப்பை நவீனமயமாக்க பொது சொத்துக்களை தனியாருக்கு விற்றுள்ளோம்.