தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா தடுப்பூசி தயாரிப்பில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது - மத்திய சுகாதார அமைச்சகம்

டெல்லி: கரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், தடுப்பூசி தயாரிப்பில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சக உயர் அலுவலர் தெரிவித்துள்ளார்.

Vaccine
Vaccine

By

Published : Jul 31, 2020, 8:43 AM IST

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சிறப்பு உயர் அலுவலர் ராஜேஷ் பூஷன் நேற்று (ஜூலை 30) செய்தியாளர்களைச் சந்தித்து நாட்டின் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து பேசினார்.

அவர் பேசியதாவது, 'இந்தியாவில் இரண்டு கரோனா தடுப்பூசிகளின் பரிசோதனை தற்போது நடைபெற்று வருகிறது. முதல் பரிசோதனையில் 1,150 பேரும், இரண்டாவது பரிசோதனையில் 1,000 பேரும் தங்களை உட்படுத்திக்கொண்டனர். சீனா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மூன்று கட்ட பரிசோதனையை எட்டியுள்ளன.

இந்தியாவில் மருந்து உற்பத்தித் துறை சிறப்பான நிலையில் உள்ளது. எனவே, கரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் கிடைத்தவுடன் உலகளாவிய தேவைக்கான தடுப்பூசி உற்பத்தியில் இந்தியா முக்கிய பங்காற்றும்.

இந்தியாவில் நோய் பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், உயிரிழப்பு விழுக்காடு குறைந்துவருகிறது. இது நம்பிக்கை அளிக்கும் அம்சம்' எனக் கூறினார்.

இதையும் படிங்க:கள்ளச்சந்தையால் நாட்டிற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு!

ABOUT THE AUTHOR

...view details