உலகம் முழுக்க மனித உயிர்களுக்கு கரோனா (கோவிட்-19) வைரஸ் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்த வைரஸை அழிக்கும் விதமாக மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், மாத்திரைகள் கண்டறியும் முயற்சியில் உலக சுகாதார அமைப்பு ஈடுபட்டுவருகிறது.
இந்த ஆராய்ச்சி பணிகளில் இந்திய மருத்துவர்களும் பரஸ்பர ஒத்துழைப்பை வழங்குகின்றனர். இதற்கான அறிவிப்பை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) வெளியிட்டுள்ளது. அதன்படி சர்வதேச மருத்துவ ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து கோவிட்-19க்கான மருந்தை கண்டறியும் ஆராய்ச்சியில் இவர்கள் ஈடுபடுகின்றனர்.