வங்கதேசத்திற்கு ரயில் என்ஜின்கள் வழங்குவது தொடர்பாக இந்தியன் ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கதேசத்தில் தற்போது செயல்பட்டுவரும் ரயில் என்ஜின்களில் 72 விழுக்காடு அதன் ஆயுள்காலம் முடிந்தும் இயக்கப்பட்டுவருவதால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் என்ஜின் கொள்முதல் செய்ய வங்கதேசம் அணுகியது.
வங்கதேசத்திற்கு ரயில் என்ஜின்களை ஒப்படைக்கும் இந்தியா - கிழக்கு ரயில்வே
டெல்லி: வங்கதேசத்திற்கு இன்று காணொலி காட்சி மூலம் 10 ரயில் என்ஜின்களை இந்தியா வழங்கவுள்ளது.
இதையடுத்து, இந்தியா இன்று காணொலி காட்சி மூலம் 10 டீசல் என்ஜின்களை வங்கதேசத்திற்கு வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில், இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர், ரயில்வே அமைச்சர்கள், இரு நாட்டு எல்லைகளிலுள்ள ரயில் நிலைய அலுவலர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த ரயில் என்ஜின்கள் இந்தியாவின் கிழக்கு ரயில்வேக்கு உள்பட்ட மேற்கு வங்க மாநில நதியா மாவட்டதிலுள்ள கெதே ரயில் நிலையத்திலிருந்து வங்கதேசத்தின் தர்ஷனா ரயில் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
TAGGED:
broad-gauge diesel locos