கரோனா வைரஸ் (தீநுண்மி) காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மத்திய அரசு தனி விமானங்கள் மூலம் மீட்டுவருகின்றன.
அந்த வகையில், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ரஷ்யா, ஜெர்மனி, ஸ்பெயின், தாய்லாந்து ஆகிய நாடுகளில் சிக்கித் தவிக்கும் மக்களை அழைத்து வருவதற்கான 'வந்தே பாரத்' திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மே 15ஆம் தேதி செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.