இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே எல்லையில் பதற்றம் நிலவிவருகிறது. இந்த நிலைமையை சரி செய்ய இரு தரப்பும் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றன.
இருப்பினும், மறுபுறம் இந்தியா தனது ராணுவ வலிமையை அதிகரிக்கும் பணிகளிலும் ஈடுபட்டுவருகிறது. இந்தியா ரஷ்யாவுடன் இணைந்து 90களில் இறுதியில் பிரம்மோஸ் ஏவுகணையை உருவாக்கியது. அப்போது முதலே இந்திய ராணுவத்தின் மிக முக்கிய ஆயுதங்களில் ஒன்றாக பிரம்மோஸ் இருந்து வருகிறது.
ஒலியைவிட வேகமாக செல்லும் ஆற்றல் கொண்ட பிரம்மோஸ் ஏவுகணையின் தாக்கும் வரம்பை சமீபத்தில் 298 கிலோமீட்டரில் இருந்து 450 கிலோமீட்டராக அதிகரிக்க பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் அனுமதியளித்திருந்தது.
இந்நிலையில், இந்திய பெருங்கடல் பகுதியில் இம்மாத இறுதியில் குறைந்தது மூன்று பிரம்மோஸ் ஏவுகணை சோதனைகளை நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. சமீபத்தில்தான் பிரம்மோஸ் ஏவுகணைகளை எடுத்துச் செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட சுகோய் 30 போர் விமானங்கள் இந்திய விமான படையில் சேர்க்கப்பட்டது.
இதையும் படிங்க: மனித உரிமை விதிகளை மீறுகிறது பாகிஸ்தான் - எல்லைப் பாதுகாப்பு படை இயக்குநர்