ஆந்திராவின் கடற்கரைப் பகுதியில், நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அணு ஆயுதங்களை எடுத்துச் சென்று எதிரி இலக்குகளைத் தாக்கி அழிக்கும் கே-4 (எஸ்.எல்.பி.எம்) ஏவுகணை கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன.19ஆம் தேதி) வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
இந்த ஏவுகணையானது மூவாயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள எதிரி இலக்குகளைத் துல்லியமாக தாக்கி அழிக்கும் வலிமை கொண்டது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்புகள் எதுவும் வெளிவரவில்லை. இருப்பினும் அரசு தகவல்கள் கே.4 ஏவுகணை சோதனை வெற்றியை உறுதிப்படுத்துகின்றன.
இதுமட்டுமின்றி “இது சீன ஏவுகணைகளை விட மிகவும் அதிநவீனமானது” என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த ஏவுகணையை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ), கே4 எஸ்.எல்.பி.எம் வளர்ச்சியுடன் தொடர்புடைய பிற நிறுவனங்கள் தயாரித்துள்ளன.
இந்த சாதனைக்கு அவர்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்கள். எனினும் இந்தியா நீருக்கடியில் அணுசக்தி தடுப்பு குறித்து வெளியாகும் தகவல்களை மிகைப்படுத்துதல் விவேகமற்றது. இந்தியா சமீபத்தில் உலகளாவிய அணுஆயுத நாடுகள் பட்டியலில் இணைந்தது. ஐக்கிய அமெரிக்க நாடுகள் (யூஎஸ்ஏ), சோவியத் யூனியன் ரஷியா (ரஷியா) ஆகிய நாடுகள் கடந்த காலங்களிலே இந்தப் பட்டியலில் அங்கம் வகிக்கின்றன.
இரு நாடுகளுக்கும் இடையே, 'பனிப்போர்' 1980ஆம் ஆண்டுகளில் உச்சத்தில் இருந்தது. அப்போது இரு நாடுகளும் அழிக்கமுடியாத நீர்முழ்கிக் கப்பலில் ஏவுகணைகளை நிறுத்தியிருந்தது. 12ஆயிரம் கிலோ மீட்டர் வரை சென்று தாக்கும் வலிமை கொண்டது. குறி வைத்த பின்னர் தவறு நடக்க வாய்ப்புகள் மிகமிக குறைவு.
இலக்கு பகுதிக்குள் 100 மீட்டர் வேண்டுமானால் தவறு நிகழலாம். அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது இங்கிலாந்து மற்றும் பிஃரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் நடுத்தர ஆயுத சக்தி வாய்ந்த நாடுகளாக கருதப்படுகின்றன.
சீனா தனது முதல் அணுஆயுத சோதனையை 1964ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முன்னெடுத்தது. அதன் தொடர்ச்சியாக 1984ஆம் ஆண்டு முதல் எஸ்.எல்.பி.எம். ரக ஏவுகணை சோதனை நடந்தது. ஜே.எல்.1 என்னும் இந்த ஏவுகணை 1700 கிலோ மீட்டர் வரை சென்று தாக்கும் சக்தி படைத்தது.
இதுதொடர்பாக ஆய்வுகள் தசாப்தங்களாக தொடர்ந்தது. இந்நிலையில் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜே.எல்.3 ரக ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இது ஒன்பதாயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கும். இந்த ஏவுகணைகளை முழுவீச்சில் இயக்குவது தொடர்பான சோதனை வருகிற 2025ஆம் ஆண்டு முழு வடிவம் பெறும் என கருதப்படுகிறது.
உலகளாவிய சூழலில் நீருக்கடியில் அணுசக்தி தடுப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அவசியமாகிறது. எஸ்.எல்.பி.எம். சோதனையை இந்தியா 2018ஆம் ஆண்டு முன்னெடுத்தது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்திருந்தார்.
அவர் ட்விட்டரில், “இந்தியா பெருமைகொள்கிறது. ஐ.என்.எஸ். அரிஹந்த் நீர்முழ்கிக் கப்பலில் அணுசோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது. நீருக்கடியில் அணுசக்தி தடுப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது” என தெரிவித்திருந்தார்.
அரிஹந்த் நீர்முழ்க்கிக் கப்பலில் 750 கிலோ மீட்டர் சென்று தாக்கும் மிதமான ஏவுகணை பொருத்தப்பட்டிருந்தது. இது சோதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் மூவாயிரத்து 500 கிலோ மீட்டர் சென்று தாக்கும் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அட்மிரல் அருண் பிரகாஷ் கூறும்போது, “அணுசக்தி பாதுகாப்பின் மூன்றாவது கட்டம். இந்த ஏவுகணைகள் எதிரிகளுக்கு அச்சத்தை அளிக்கின்றன. இவைகள் அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் இந்திய மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் எதிரிநாட்டுக்கு அச்சுறுத்தலாக திகழ்கிறது” என்றார்.
இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி நடத்தப்பட்ட கே.4 சோதனை சிறியது என்றாலும் குறிப்பிடத்தக்க படியாகும். ஏனெனில் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை சுடுவது உலகின் எந்தவொரு இராணுவத்திற்கும் மிகவும் சவாலான பணியாகும்.
பொதுவாக ஏவுகணைகள், விண்வெளி மற்றும் வழிமண்டலத்திற்குச் சென்று தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கடலுக்குள் சென்று தாக்கும் வலிமை கொண்ட ஏவுகணைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இது ஒரு மிகவும் நுட்பமான ஏவுகணை. அந்த வகையில் கே.4 ஏவுகணைகள், ஏவுகணை தொழிற்நுட்பத்தில் நாட்டை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. இந்தவகை ஏவுகணைகள் சோதனை முடிந்த பின்னரும் முழு வடிவம் பெற நாட்கள் பிடிக்கும். வெளிநாடுகளில் ஆண்டுகள் பல எடுத்துக்கொண்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவிலும் இதுதொடர்பாக ஆராய்ச்சி மற்றும் சோதனைகள் முழுவடிவம் பெற சிறிது காலம் எடுக்கக்கூடும்.
அதுவரை நிதி ஆதாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.!