சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கியது, கரோனா வைரஸ். இந்த வைரஸ் சீனாவில் குறைந்திருந்த நிலையில், தற்போது மற்ற நாடுகளிலும் குறைந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்திலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வந்தனர். குறிப்பாக இந்தியா கரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டது.
அரம்பத்தில் இந்தியாவில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கரோனா தொற்று செப்டம்பர் மாதத்துக்கு பிறகு குறைய தொடங்கியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக, கரோனா காரணமாக சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை ஆறு லட்சத்திற்கு கீழே சென்றுள்ளது. மொத்தமாக, கரோனா காரணமாக சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 5,70,458ஆக குறைந்துள்ளது.