இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் நடைபெறும் பண்டிகையை சாதகமாக பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. அந்நாட்டு ராணுவம் இலக்கு நிர்ணயித்து அப்பாவி பொதுமக்களை கொன்று குவிக்கிறது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்: இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் - ஜம்மு-காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம்
டெல்லி: ஜம்மு-காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரியவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நவம்பர் 13ஆம் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதில், பாதுகாப்பு படையினர் ஐந்து பேர், பொதுமக்கள் நான்கு பேர் கொல்லப்பட்டனர். பலத்த காயமடைந்த 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அலுவலருக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தானின் இந்த கொடூர தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். அதில், பாகிஸ்தான் ராணுவத்தினர் எட்டு பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்தியாவுக்குள் ஊடுருவதை அந்நாட்டு அரசு தொடர்ந்து ஆதரிப்பதை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.