பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் தரை, கப்பல் மற்றும் ஆகாய மார்க்கமாக எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்க வல்லவை. இந்திய - ரஷ்ய கூட்டுத் தயாரிப்பான இந்த பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையின் இரண்டாம்கட்ட சோதனை, ஒடிசா மாநிலம் பாலசூர் கடற்கரையில் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.
நீண்ட தூரம் பயணித்து இலக்கை வெற்றிகரமாகத் தாக்கும் வகையில் விஞ்ஞானிகள் இந்த ஏழுகணைகளை வடிவமைத்துள்ளனர். இந்த ஏவுகணை சுமார் 400 கிமீ பயணம் செய்து தாக்கும் தன்மை கொண்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பிஜே -10 திட்டத்தின் கீழ் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முன்னதாக, பிரம்மோஸ் ஏவுகணையின் முதல் சோதனை கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட்டது.