அனைவருக்கும் பாதுகாப்பான சுகாதார வசதிகளை அளிக்கவும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் உலக கழிப்பறை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளில், கோடிக்கணக்கான மக்களுக்குச் சுத்தமான கழிவறைகளை அமைத்து தந்ததன் மூலம் இணையற்ற சாதனையைப் படைத்துள்ளோம் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் கழிப்பறை என்பதில் உறுதியாக உள்ளோம் - பிரதமர் மோடி - உலக கழிப்பறை தினம்
டெல்லி: தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கழிப்பறைகளை அமைத்து சுகாதாரத்தை மேம்படுத்தியது மட்டுமல்லாமல் பெண்களின் கண்ணியம் காக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மோடி
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "உலக கழிப்பறை தினமான இன்று, அனைவருக்கும் கழிப்பறை என்ற தீர்மானத்தை உறுதிப்படுத்துகிறோம். கடந்த சில ஆண்டுகளில், கோடிக்கணக்கான மக்களுக்குச் சுத்தமான கழிவறைகளை அமைத்து தந்ததன் மூலம் இணையற்ற சாதனையைப் படைத்துள்ளோம். தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கழிப்பறைகளை அமைத்து சுகாதாரத்தை மேம்படுத்தியது மட்டுமல்லாமல் பெண்களின் கண்ணியம் காக்கப்பட்டுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.
Last Updated : Nov 19, 2020, 4:09 PM IST