கரோனா வைரஸ் நோய் இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. இதுவரை 5,737 பேர் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவில் 166 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
அதற்கு ஏற்றார்போல் மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், "மனித இனத்தின் எதிர்காலத்தை மீட்டெடுப்பதற்கான போரில், தங்களின் உயிர்களைக்கூட பொருட்படுத்தாமல் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைஒ பணியாளர்கள், காவல் துறையினர், அத்தியாவசிய பொருள்களை விற்பவர்கள், வங்கி ஊழியர்கள், அரசு ஊழியர்கள் போன்றோர் முன்னிலையில் உள்ளனர்.
அவர்களின் தன்னலமற்ற சேவைக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் பாதுகாப்பாக இருப்பதை நீங்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். உங்களின் ஓய்வற்ற அர்ப்பணிப்பு கரோனாவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை எங்களிடம் கொண்டு வந்துள்ளது" என பதிவிட்டுள்ளார்.