கடந்த நவம்பர் 19ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் நக்ரோடா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற என்கவுன்டர் சம்பவத்தில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த நான்கு பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இது குறித்த முக்கிய ஆவணங்களை ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளின் உறுப்பினர்களிடம் இந்தியா நேற்று வழங்கியது.
இதனைத் தொடர்ந்து, இந்தியாவை குற்றஞ்சாட்டும் வகையிலான ஆவணங்களை ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸிடம் பாகிஸ்தான் வழங்கியுள்ளது. இதனை விமர்சித்துள்ள ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி, பொய்யுரைகளைப் பரப்புவது பாகிஸ்தானுக்குப் புதிதல்ல எனத் தெரிவித்துள்ளார்.