தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கடல்சார் துறைப் பாதுகாப்பு: இந்தியா - சிங்கப்பூர் இடையே கையெழுத்து! - மனிதாபிமான உதவி

டெல்லி: கடல்சார் துறையில் கவனம் செலுத்துவதன் மூலம் சிங்கப்பூருடனான பாதுகாப்பு கூட்டாட்சியை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக இந்திய அலுவலர்கள் தெரிவித்தனர்.

india-singapore-resolve-to-expand-defence-ties
india-singapore-resolve-to-expand-defence-ties

By

Published : Aug 29, 2020, 12:56 PM IST

இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் டாக்டர் அஜய் குமார் மற்றும் சிங்கப்பூரின் நிரந்தரச் செயலாளர் (பாதுகாப்பு) சான் ஹெங் கீ ஆகியோர் தலைமையில் நேற்று (ஆகஸ்ட் 28) காணொலி காட்சி மூலம் இந்தியா- சிங்கப்பூர் இடையேயான பாதுகாப்பு குறித்த மாநாடு நடைபெற்றது.

இந்தியா-சிங்கப்பூர் பாதுகாப்பு கொள்கை உரையாடலின் (டிபிடி) மெய்நிகர் கூட்டத்தில் இரு தரப்பினரும் தங்கள் பாதுகாப்பு உறவுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.

இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான பல பிரச்னைகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு கூட்டாட்சியை மேலும் மேம்படுத்த இரு தரப்பினரும் உறுதியளித்துள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இருதரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் உயர்த்துவதே கூட்டத்தின் கவனம் என்று இந்திய அலுவலர்கள் தெரிவித்தனர்.

இந்தியா-சிங்கப்பூர் பாதுகாப்புக் கொள்கை உரையாடலின் முடிவில், இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணம் (எச்ஏடிஆர்) அமல்படுத்தும் ஏற்பாடும் கையெழுத்தானது" என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details