தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சீனாவிலிருந்து இறக்குமதி கூடாது - ராம் மாதவ் கோரிக்கை - சீன பொருட்கள் இறக்குமதி

டெல்லி: சீனாவிலிருந்து மேற்கொள்ளும் இறக்குமதிகளை இனிவரும் காலங்களில் குறைத்துக்கொள்ள வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ராம் மாதவ் கேட்டுக்கொண்டார்.

ராம் மாதவ்
ராம் மாதவ்

By

Published : Jun 18, 2020, 5:40 PM IST

இந்தியா - சீனா எல்லைப்பகுதியான லடாக்கில் இரு ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். சீனாவின் அத்துமீறல் நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் கண்டனம் குவிந்துவருகிறது.

சீனா பொருள்களை புறக்கணிப்போம் என்ற குரல் நாடு முழுவதும் ஒலித்துவரும் நிலையில், இது தொடர்பாக பாஜக மூத்த தலைவரும், தேசிய செயலாளருமான ராம் மாதவ் தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், "சீனாவில் இருந்து ரசாயனம், மொபைல் போன்கள், மின்னணு சாதனங்கள் என பல்வேறு பொருள்களை இந்தியா இறக்குமதி செய்துவருகிறது. இந்த அனைத்து பொருள்களையும் உற்பத்தி செய்யும் திறனை இந்தியாவே பெற்றுள்ளது. எனவே, இனிவரும் காலங்களில் மேற்கண்ட பொருள்களை இறக்குமதி செய்வதை இந்தியா குறைத்துக்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் அவர், நாட்டின் ராணுவ வீரர்களின் உயிர்கள் விலைமதிப்பற்றது எனவும் இந்த பிரச்னையை உணர்வுப்பூர்வமாக அனுகாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதே இருநாட்டினருக்கும் நலம் என ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:'எல்லைப் பதற்றங்கள் பேச்சுவார்த்தை முலம் சரிசெய்யப்படவேண்டும்' - டி.ராஜா

ABOUT THE AUTHOR

...view details