இந்தியாவில் கரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 128ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது மூன்றாக உயர்ந்துள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் மார்ச் 31ஆம் தேதிவரை மூடப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் தாக்கம் இந்தியப் பொருளாதாரத்தை வெகுவாகத் பாதிக்கும் என ரிசர்வ் வங்கி தொடங்கி சர்வதேச நிறுவனங்கள் தொடர் எச்சரிக்கையை தெரிவித்துள்ளன.
கரோனாவால் இந்தியப் பொருளாதாரத்திற்கு வரப்போகும் பாதிப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியா விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனக் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.