தலைநகர் டெல்லியில் தொடங்கி நடந்துவரும் ரைசினா உரையாடல் 2020இல் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கலந்துகொண்டார். அப்போது அவர், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இடமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அந்த விழாவில் செர்ஜி லாவ்ரோவ் தொடர்ந்து பேசியதாவது:
பிரிக்ஸ் தொடர்பான முடிவுகளுக்கு எந்தவொரு முக்கியத்துவத்தையும் ஜி7 நாடுகள் தீர்மானிக்க முடியாது. அது ஜி20 மாநாடாக இருக்க வேண்டும். இந்தியாவும் பிரேசிலும் முற்றிலும் யு.என்.எஸ்.சி.யில் இருக்க வேண்டும். வளரும் நாடுகளுக்கு அங்கு போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.