தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில்  அதிகரிக்கும் கரோனா - கரோனா வைரஸ் தொற்று பரவலின் வேகம்

இந்தியாவில் கடந்த ஆறு வாரங்களாக கரோனா வைரஸ் தொற்று பரவலின் வேகம் தொடர்ந்து அதிகரித்துவருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

India sees sudden spike in COVID cases
India sees sudden spike in COVID cases

By

Published : Nov 6, 2020, 2:18 PM IST

டெல்லி:புள்ளி விவரத் தகவல்களின்டி, இந்தியா கடந்த ஆறு வாரங்களில் அதிகளவு கரோனா பாதிப்புகளை சந்தித்து வருகிறது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் அதிகப்படியான கரோனா பாதிப்பினை சந்தித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்த மாநிலங்களில் 50 விழுக்காடு வரையிலான கரோனா நோயாளிகள் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் கூறியுள்ளது.

நாட்டில் கடந்த ஆறு வாரங்களில் தினசரி கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சராசரியாக 73 ஆயிரத்தைக் கொண்டுள்ளது. நேற்று தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 157 ஆக உள்ளது.

முன்னதாக, கரோனா பரிசோதனை முடிவுகளில் தொற்றால் பாதிக்கப்படவில்லை என முடிவு வந்த பலரும் இன்ப்ளூயன்சா, சுவாச நோய் குறைபாட்டுடன் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், அவர்களுக்கு எளிதில் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: புதிய உச்சத்தை தொடும் டெல்லி காற்று மாசு!

ABOUT THE AUTHOR

...view details