தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா வைரஸ் : இந்தியர்களை வெளியேற்ற சீனாவுக்கு வெளியுறவுத் துறை கோரிக்கை - கொரோனா வைரஸ் இந்தியர்களை வெளியேற்ற கோரிக்கை

டெல்லி : சீனாவில் கரோனா வைரஸ் பரவிவரும் சூழலில், அந்நாட்டின் ஹூபே மாகாணத்திலிருந்து இந்தியர்களை வெளியேற்ற சீன அரசிடம் இந்திய வெளியுறவத் துறை அனுமதி கோரியுள்ளது.

corona virus, கொரோனா வைரஸ்
corona virus

By

Published : Jan 29, 2020, 9:13 PM IST

Updated : Mar 17, 2020, 5:08 PM IST

சீனாவில் கரோனா வைரஸ் என்னும் தொற்று நோய் மிக வேகமாகப் பரவிவருகிறது. அந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை 106 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சூழலில், கரோனா வைரஸின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்து இரண்டு விமானங்கள் மூலம் இந்தியர்களை வெளியேற்ற சீனா அரசிடம் இந்திய வெளியுறவுத் துறை அனுமதி கோரியுள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில், "ஹூபே மாகாணத்தில் உள்ள இந்தியர்களை இரண்டு விமானங்கள் மூலம் இந்தியா அழைத்துவர சீன அரசிடம் அனுமதி கோரியுள்ளோம்" என்றார்.

மேலும், சீனாவில் உள்ள இந்தியத் தூதரகத்தை அணுகாத இந்தியர்கள் உடனடியாக உதவி எண்கள், மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : ஆப்பிள் நிறுவனத்தை பாதிக்கும் கரோனா?

Last Updated : Mar 17, 2020, 5:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details