விண்வெளியில் பூமியை சுற்றிவரும் செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையை , மார்ச் 27ஆம் தேதி, இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது. இதற்கு 'மிஷன் சக்தி' என்று பெயரிடப்பட்டது.
இந்தச் சோதனை குறித்து குறித்து உலகளவில் பல்வேறு விஞ்ஞானிகளும், தலைவர்களும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துவரும் நிலையில், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு இது பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக நாசா விமர்சித்துள்ளது.
இதுபற்றி நாசாவின் நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் பேசுகையில், " இந்தியாவின் சோதனையால் 400க்கும் மேற்பட்ட விண்வெளித் துகள்கள் புவி வட்டப் பாதையில் சுற்றி வருகின்றனர். அவற்றில் சுமார் 60 துகள்களின் போக்கைக் கண்காணித்து வருகிறோம். தற்போது, அவை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சற்று மேலே பறந்து வருகிறது.