தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 13, 2020, 11:03 PM IST

ETV Bharat / bharat

பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி வருவாய் முழுவதும் இதற்கு தான் செலவு செய்யப்படுமா ?

டெல்லி: இந்தியா-ரஷ்யா கூட்டாக உருவாக்கிய பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை விற்பனை மூலம் கிடைக்கும் முழு வருவாயும் பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (ஆர் & டி) நடவடிக்கைகளுக்காக மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுமென தகவல் வெளியாகி உள்ளது.

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை
india-russia-will-use-all-revenues-earned-from-brahmos-missile-export-only-for-r-and-d

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வல்லுநர் வட்டாரம் ஈ.டி.வி பாரத்திடம் தெரிவிக்கையில், "வெளிநாடுகளுக்கு பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதியிலிருந்து கிடைக்கும் வருவாய் முழுமையாக இருநாட்டு ஏவுகணைகள் உற்பத்தியை மேம்படுத்தவும், துறைச்சார்ந்த கூட்டு வளர்ச்சிக்காகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டுமென இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து ஒப்புக் கொண்டுள்ளன.

எவுகணையின் கூட்டு உற்பத்தியில் அடுத்ததாக கப்பல் ஏவுகணைகளில் எறிபொருள் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக இது பயன்படுத்தப்படலாம். ஆசியக்கண்டத்திலும், லத்தீன் அமெரிக்காவிலும் இருந்து குறைந்தபட்சம் எட்டு நாடுகள் பிரம்மோஸ் ஏவுகணையின் நிலம் மற்றும் கடற்படை பதிப்பை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன.

சாதுர்யமான பண்புகளைக் கொண்ட உலகின் அதிவேக கப்பல் ஏவுகணையாக பிரம்மோஸ் கருதப்படுவதே இதற்கு முக்கியமான காரணமாகும். பிரம்மோஸ் ஏவுகணையை வாங்கும் ஆர்வத்தில் உள்ளதாக வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா, பிரேசில் சிலி மற்றும் வெனிசுலா போன்ற பல நாடுகளின் பெயர்கள் சில காலமாக அதிகமாக அடிபடுகின்றன.

மற்ற நாடுகளுக்கான ஏவுகணை ஏற்றுமதியும், விற்பனையும் அந்த நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவைக் கருத்தில் கொண்டே வழிநடத்தப்படும் என்பது உறுதி என இந்திய அரசின் கொள்கையின் வழியாக உணரலாம்.

பாதுகாப்பிற்கான ஆயுத உற்பத்தி உலகில் 'செயல் உத்தி எல்லை' கொள்கைக்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்கின்ற பிரம்மோஸ் ஏவுகணையின் பணி அறிக்கை "பிரம்மோஸ் ஏற்றுமதி மூலம் கூட்டு நிறுவன பங்காளிகளின் நட்பு நாடுகளுடன் செயல் உத்தி கூட்டணியைப் பலப்படுத்துதல்" என்று உறுதியளிக்கிறது.

இது இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கைகளின் மைல் கல்லாக கருதப்படுகிறது. அச்சுறுத்தும் கோவிட்-19 தொற்றுநோயின் பரவல் ஏற்றுமதி திட்டத்தை கெடுத்தன. அதன் காரணமாக ஒப்பந்தங்களை இறுதி செய்தில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

இப்போதைக்கு, பிரம்மோஸின் கடல் மற்றும் நில பதிப்புகள் இந்த ஆண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோ விற்பனைக்கு வரலாம். வான் பதிப்பு ஏற்றுமதிக்கு வழங்கப்படவில்லை என்பது மட்டும் உறுதி" என தகவல் அறிய முடிகிறது.

3-டன் எடை கொண்ட பிரம்மோஸ், சுமார் 450 கி.மீ. 2.8 மாக் (ஒரு மணி நேரத்திற்கு 3,347 கி.மீ) வேகத்தில், இது 300 கிலோ போர்க்கப்பலை சுமக்கும் திறன் கொண்டது. ரேடார் கண்களில் படாமல் பலவிதமான விமானப் பாதைகளில் இலக்கை நோக்கி நேரடியாக துல்லியமாக இயக்கும் அதிவேக இயக்க ஆற்றல் இதன் தனி சிறப்பு.

கடல் வழி, வான் வழி, நில வழி அனைத்து பிரம்மோஸ் ஏவுகணைகளும் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. 1998 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மற்றும் ரஷ்ய அரசுக்கு சொந்தமான என்.பி.ஓ மஷினோஸ்ட்ரோயினியா ஆகியவற்றுக்கு இடையே அந்தந்த அரசாங்கங்களுக்கிடையேயான ஒரு ஒப்பந்தத்தின் மூலம் அமைக்கப்பட்டது தான்

பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ். இந்திய அரசு 50.5 % பங்கும், ரஷ்யா 49.5 % பங்கும் கொண்டிருக்கிறது பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம். பிரம்மபுத்ரா நதியின் சீற்றத்திலிருந்தும், மோஸ்க்வா நதியின் கருணையையும் குறிக்கும் விதமாக ‘பிரம்மோஸ்’ என்ற பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :அமெரிக்க ராணுவ அகாதமியில் பட்டம்பெற்ற முதல் 'சிங்'கப்பெண்!

ABOUT THE AUTHOR

...view details