உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 17 லட்சத்தைத் தொடவுள்ளது. நேற்று மட்டும் கரோனாவால் 57 ஆயிரத்து 117 பேர் பாதிக்கப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்து 95 ஆயிரத்து 988ஆக உயர்ந்துள்ளது.
அதில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 65 ஆயிரத்து 103 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 94 ஆயிரத்து 374ஆகவும் உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 511ஆக உள்ளது.