கரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் உயர்ந்துகொண்டே போகிறது. நேற்று மட்டும் இந்தியாவில் புதிதாக 227 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இது ஒருநாளில் கண்டறியப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையாகும். இதனால் இந்தியாவில் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1251ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 102 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். மீதமுள்ள 1117 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில் 202 பேரும், மகாராஷ்ட்டிராவில் 198 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உள்ளது.