இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், " கரோனா வைரஸ் தொற்று பின்னணியில் முஸ்லிம்களை குறிவைத்து இந்தியாவில் பாகுபாடு நடைபெறுகிறது. முஸ்லிம்களை வேண்டுமென்றே குறிவைப்பதன் மூலம் மோடி அரசு, கரோனா தாக்கத்தை திசை திருப்ப முயற்சிக்கிறது. இது ஆயிரக்கணக்கான மக்கள் பசி பட்டினியில் தவித்து வருகிறதை மறைப்பதற்கு எனப் பதிவிட்டிருந்தார்.
பாகிஸ்தான் பிரதமரின் குற்றச்சாட்டும்... இந்தியாவின் நிராகரிப்பும் - அனுராக் ஸ்ரீவாஸ்தவா
டெல்லி: இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு நடைபெறுவதாக கூறிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றச்சாட்டை இந்தியா அரசு நிராகரித்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, "பாகிஸ்தான் பிரதமரின் மாறுபட்ட கருத்துக்கள் அனைத்துமே அந்த நாட்டில் நடைபெறும் அரசின் மோசமாக கையாளுதலிலிருந்து கவனத்தை மாற்றும் முயற்சியாகும். சொந்த நாட்டில் உண்மையாகவே பாகுபாடு இருக்கும் சிறுபான்மை சமூகங்களின் கவலைகளை நிவர்த்தி செய்ய முதலில் முயற்சியுங்கள்" என அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:கரோனா பணிக்காக திருமணத்தை ஒத்திவைத்த பெண் எஸ்பி; பாராட்டும் எம்பி