இந்தியா மற்றும் சீனா இடையே நிலவிவரும் எல்லைப் பிரச்னையை தீர்ப்பதற்காக இரு நாடுகளும் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திவரும் சூழலில், சரிசமமான தொலைவில் இருநாட்டுப் படைகளும் விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற சீனாவின் பரிந்துரையை இந்தியா நிராகரித்துள்ளது.
வெளியுறவு அலுவலர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து, ராணுவ அலுவலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்த இருநாட்டு அரசுகளும் முயற்சி செய்துவருகிறது. இருநாடுகளும் சமதொலைவில் படைகளை விலக்கிக்கொள்ளவேண்டும் என்பதை நிராகரித்துள்ள இந்தியா, சீனப்படைகள் இதற்கு முன்பு இருந்த இடத்திற்கு திரும்பச் செல்லவேண்டும் என்றும் கூறியுள்ளது.