தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாட்டில் 32 லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பு - கோவிட் 19 பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 63 ஆயிரத்து 173 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 32 லட்சத்தைத் தாண்டியது.

COVID
COVID

By

Published : Aug 26, 2020, 9:56 PM IST

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 63 ஆயிரத்து 173 கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அத்துடன் ஆயிரத்து 059 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

இதையடுத்து, நாட்டின் மொத்த நோய்த் தொற்று எண்ணிக்கை 32 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை மொத்தம் 32 லட்சத்து 34 ஆயிரத்து 474 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 7 லட்சத்து 07 ஆயிரத்து 267 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 24 லட்சத்து 67 ஆயிரத்து 758 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.மேலும், நாட்டில் இதுவரை 59 ஆயிரத்து 449 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இன்று (ஆகஸ்ட் 12) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 8 லட்சத்து 23 ஆயிரத்து 992 பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும், இதுவரை சுமார் மூன்று கோடியே 76 லட்சத்து 51 ஆயிரத்து 512 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடு முழுவதுமுள்ள காச நோயாளிகளை சுகாதாரத்துறை கூர்ந்து கவனித்துவருவதாகக் கூறியுள்ளது. காச நோயாளிகளுக்கு நோய்தொற்று பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிமுள்ளது என்பதால் அவர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:உலகளவில் கரோனா பாதிப்பு 2.40 கோடியாக உயர்வு

ABOUT THE AUTHOR

...view details