உலக புலிகள் தினத்தை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், “ சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் அதன் சாதனைகள் குறித்தும் பெருமைப்படுகிறேன். நிலம் மற்றும் மழை பற்றாக்குறை இருந்தபோதிலும், உலகின் பல்லுயிர் பல்வகைமையில் எட்டு விழுக்காடு இந்தியாவில் உள்ளது.1973ஆம் ஆண்டு நாடு முழுவதும் வெறும் 9 புலிகள் காப்பகங்கள் மட்டுமே இருந்தன, ஆனால் தற்போது அவை 50ஆக அதிகரித்துள்ளன.
புலிகள் பாதுகாப்பில் முதன்மை வகிக்கும் இந்தியா- அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
டெல்லி: புலிகள் காப்பகங்களை நிர்வகிப்பதில் இந்தியா தலைமை பொறுப்பு வகிக்கவும், மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்படவும் தயாராக உள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
உலகளவில் 2.5 விழுக்காடு நிலத்திலும், 4 விழுக்காடு மழையிலும், 16 விழுக்காடு உலக மக்கள் தொகையிலும், உலக அளவில் பல்லுயிர் பெருக்கத்தில் 8 விழுக்காடு புலியினத்தை இந்தியா உள்ளடக்கியுள்ளது. புலிகளை பாதுகாக்க மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்பட இந்தியா தயாராக இருக்கிறது. புலிகள் காப்பகங்களின் மேலாண்மை, பயிற்சி, திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றிக்காக 12 நாடுகளுடன் இணைந்து பணியாற்றநாங்கள் தயாராக உள்ளோம்.” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், 50 புலிகள் காப்பகங்களின் நிலை குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. அறிக்கையின்படி, புலிகளின் எண்ணிக்கையில் மத்தியப் பிரதேச மாநிலம் முதலிடத்திலும், கர்நாடகா இரண்டாவது இடத்திலும் உள்ளன. புலிகள் பாதுகாப்பில் இந்தியாவின் பங்களிப்பு வியப்பளிக்கிறது என்று கின்னஸ் உலக சாதனைப் புத்தக அமைப்பு அங்கிகரிந்துள்ளதாக சுற்றுச்சூழல் இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ கூறினார் .