பட்டினி, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலை தன்னார்வு தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 117 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 30.3 மதிப்பெண்னை பெற்று 102ஆவது இடத்தை பெற்றுள்ளது. பாகிஸ்தான் 94ஆவது இடத்திலும் வங்கதேசம் 88ஆவது இடத்திலும் நேபாளம் 73ஆவது இடத்திலும் உள்ளது.
#GHI பாகிஸ்தானைவிட மோசமான நிலையில் இந்தியா! - அதிர்ச்சியளிக்கும் தகவல் - உலக பட்டினி குறியீடு
டெல்லி: உலக பட்டினி குறியீட்டில் பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகள் முன்னேற்றம் அடைந்த நிலையில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது.
பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் போன்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியா பட்டினியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக இதன்மூலம் தெளிவாகிறது. உலக அளவில் இந்திய குழந்தைகள்தான் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
இந்த அறிக்கை ஆண்டுக்கு ஒருமுறை வெளியிடப்பட்டுவருகிறது. 2014ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 76 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 55ஆவது இடத்தை பிடித்தது. இதேபோல், 2017ஆம் ஆண்டு 100ஆவது இடத்தையும் 2018ஆம் ஆண்டு 103ஆவது இடத்தையும் இந்திய பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.