மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஈடிவி பாரத்துக்கு காணொலி வாயிலாக அளித்த சிறப்பு நேர்காணலில், “இந்தியாவில் சுகாதார முன்னணி வீரர்களை பாதுகாக்கும் வகையில், தினந்தோறும் மூன்று லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ கிட்ஸ்) தயாரிக்கப்படுகிறது. 450 ஆய்வகங்கள் வாயிலாக 95 ஆயிரம் பேருக்கு தினந்தோறும் கரோனா பரிசோதனை நடத்த முடியும்” என்று கூறினார்.
ஈடிவி பாரத் ஆசிரியரின் கேள்விக்கு மத்திய அமைச்சர் அளித்த பதில்கள் வருமாறு:-
1) கேள்வி: இது அனைவருக்கும் கடினமான காலம். இந்தியாவின் நிலையை அறிந்து கொள்ள அனைவரும் விரும்புகின்றனர். நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று உங்கள் அரசாங்கம் உறுதியாக நம்புகிறதா?
பதில்: கரோனா வைரஸ் பரவலுக்கு முன்பே அரசாங்கம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. எல்லைப் பகுதியில் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் சோதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சம் மக்கள் சமூக கண்காணிப்பில் உள்ளனர். ஒரு நாள் மக்கள் ஊரடங்கு மற்றும் முழு பொதுஅடைப்பு (லாக்டவுன்) உள்ளிட்ட நடவடிக்கைகளை தைரியமாக எடுத்தோம்.
இந்தச் செயல்திறன்மிக்க திட்டங்களால், மற்ற நாடுகளுடன் ஒப்பீடும் போது இந்தியா நன்றாகவே உள்ளது. நாங்கள் உலகம் முழுவதும் பார்க்கிறோம். இந்தியாவில் குறைந்த இறப்பு விகிதம் உள்ளது. அடுத்த 11-12 நாள்களுக்குள் பாதிப்பாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். நமது நாட்டில் 30 விழுக்காட்டினர் குணமடைந்துவருகின்றனர். அடுத்த நான்கு மாதங்களுக்குள் நாட்டில் 450-க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள் விரிவுப்படுத்தப்படும். அதன்மூலம் தினசரி 95 ஆயிரம் பேருக்கு சோதனை நடத்தலாம்.
2) கேள்வி: நாட்டில் கோவிட்-19 பாதிப்புகள் மற்றும் பரவல் அதிகரித்துவருகின்றன. வருங்காலங்களில் சோதனைகள் அதிகரிக்கும் போது பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதா?
பதில்: இந்தியாவில் கோவிட்-19 பாதிப்புகள் குறிப்பிடத்தக்க அதிகரிப்புகள் இல்லை. நமது பாதிப்பாளர்கள் குறித்த வரைப்படம் தெளிவாக உள்ளது. ஒரு நாளில் இரண்டாயிரம் பேருடன் சோதனை செய்ய தொடங்கினோம். தற்போது கடந்த 24 மணி நேரத்தில் 85 ஆயிரம் பேரை சோதித்துள்ளோம்.
கடந்த மூன்று மாதங்களில் நாட்டில் சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை பாதிப்பாளர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையை சிறிய நாடுகளுடன் ஒப்பிடுகிறோம். அங்கு லட்சக்கணக்கில் பாதிப்பாளர்கள் உள்ளனர். மேலும், நமது நாட்டில் இறப்பு விகிதம் 3 விழுக்காடு ஆக உள்ளது. ஆனால் உலகளவில் 7 முதல் 7.5 விழுக்காடு ஆக உள்ளது.
3) கேள்வி: கரோனா பரிசோதனை மையங்கள் தொடர்பாக அரசின் திட்டம் என்ன? இந்த மாத இறுதிக்குள் எத்தனை சோதனை மையங்கள் கைவசம் இருக்கும்? தற்போதைய சோதனை திட்டத்தின் பின்னணி என்ன? சோதனை கூடங்கள் போதுமானதாக உள்ளதா?
பதில்: வைரலாஜி சோதனைக்காக நாங்கள் மாதிரிகளை அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளோம். வைரஸின் முதல் பாதிப்பு அறிவிக்கப்பட்டபோது ஜனவரி மாதத்தில் நம்மிடம் ஒரு ஆய்வகம் மட்டுமே இருந்தது. தற்போது, (மே இரண்டாவது வாரத்தில்) நாடு முழுவதிலும் 472 ஆய்வகங்கள் விரிவுப்படுத்தியுள்ளோம்.
(மத்திய அமைச்சரின் நேர்காணலை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே சொடுக்கவும்)
இதில் 275 ஆய்வகங்கள் அரசுத் துறையைச் சேர்ந்தவை. இதுவரை 95 ஆயிரம் சோதனை திறனை உருவாக்கியுள்ளோம். இந்தத் திட்டம் ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதலின்பேரில், நிபுணர் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் அமைந்துள்ளது. யார் சோதிக்கப்பட வேண்டும் என்பதற்கான தெளிவான ஆலோசனையும் வழிகாட்டுதலும் அதில் உள்ளன.
4) கேள்வி. மத்திய அரசு அல்லது சுகாதார அமைச்சகம் சார்பில் வெளியிடப்படும் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது சில மாநிலங்களால் வழங்கப்படும் புள்ளிவிவரங்களில் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளதே?