லடாக், கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு, இந்திய - சீன நாடுகளுக்கிடையே தொடர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், நாட்டின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் விதமாக Spice-2000 வெடிகுண்டுகளை வாங்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. கடந்த ஆண்டு, பாலகோட் பகுதியில் அமைந்துள்ள பயங்கரவாத முகாம்களை அழிப்பதற்காக Spice-2000 ரக வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டன.
அவசர நிதி அதிகாரத்தின் மூலம், 500 கோடி ரூபாய் மதிப்புக்கு குறைவான ஆயுதங்களை வாங்க பாதுகாப்பு படைகளுக்கு மத்திய அரசு தற்போது அதிகாரம் வழங்கியுள்ளது. இது குறித்து வெளியான செய்தியில், "இந்திய விமானப் படையிடம் Spice-2000 ரக வெடிகுண்டுகள் ஏற்கனவே இருப்பு உள்ளது. அவசர ஆயுதக் கொள்முதல் அதிகாரத்தின் மூலம், மேலும் அதிக எண்ணிக்கையில் Spice-2000 ரக வெடிகுண்டுகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.