நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் (ஜூலை முதல் செப்டம்பர் வரை) பிலிப்பைன்ஸின் பொருளாதாரம் 6.2 விழுக்காடு வளர்ச்சி விகிதத்தைக் கண்டிருந்தது. முதல் காலாண்டான ஜனவரி முதல் மார்ச் வரையிலான உள்நாட்டு மொத்தஉற்பத்தி 5.2 விழுக்காடாகவும் இரண்டாவது காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையுள்ள உள்நாட்டு மொத்தஉற்பத்தி முறையே 5.5 விழுக்காடாக இருந்தது.
உள்நாட்டு மொத்தஉற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 6 முதல் 7 விழுக்காடுவரை இருப்பது இதுவே முதல் முறை. இதையே பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே நிர்ணயித்த இலக்காகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.