தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இஸ்லாமியர்களை பாகிஸ்தான் அனுப்ப வேண்டும்: கிரிராஜ் சிங் - குடியுரிமை திருத்தச் சட்டம், பிகார், கிரிராஜ் சிங், இஸ்லாமியர்கள், நாடு பிரிவினை, 1947 சுதந்திரம்

பாட்னா: 1947 பிரிவினையின் போது அனைத்து முஸ்லிம்களையும் பாகிஸ்தான் அனுப்பியிருக்க வேண்டும். இஸ்லாமியர்களை பாகிஸ்தான் அனுப்பாவிட்டால், இந்தியர்கள் விலை கொடுக்க நேரிடும் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கின் பேசியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

giriraj singh  caa  National Register for Citizens  இஸ்லாமியர்களை பாகிஸ்தான் அனுப்ப வேண்டும்: கிரிராஜ் சிங்  குடியுரிமை திருத்தச் சட்டம், பிகார், கிரிராஜ் சிங், இஸ்லாமியர்கள், நாடு பிரிவினை, 1947 சுதந்திரம்  India paying price for not sending Muslims to Pak: Giriraj
India paying price for not sending Muslims to Pak: Giriraj

By

Published : Feb 22, 2020, 6:21 AM IST

மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான கிரிராஜ் சிங், பிகார் பூர்னியா மாவட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு கோரினார். அப்போது பேசிய அவர் 1947ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை குறித்து மத ரீதியாக கருத்து தெரிவித்தார். இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கிரிராஜ் சிங் தனது கருத்தில், “நம் முன்னோர்கள் தவறிழைத்துவிட்டனர். 1947 நாடு பிரிவினையை கண்டபோது அனைத்து முஸ்லிம்களும் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. நாடு சுதந்திரம் அடைந்தபோது ஜின்னா இஸ்லாமிய நாட்டை கோரினார்.

ஜின்னாவின் கோரிக்கை வெற்றிபெற்றது. ஆனால் இந்துக்களின் கோரிக்கை வெற்றிபெறவில்லை. இந்தியாவில் இஸ்லாமியர்கள் தங்கும்பட்சத்தில் நாம் பெரிய விலை கொடுக்க நேரிடும்” என்றார்.

இஸ்லாமியர்களை பாகிஸ்தான் அனுப்ப வேண்டும்: கிரிராஜ் சிங்

குடியுரிமை திருத்தச் சட்டம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து அகதிகளாக இந்தியா வந்த இஸ்லாமியர் அல்லாத சிறுபான்மையினருக்கு எளிதில் இந்திய குடியுரிமை கிடைக்க வழிவகை செய்கிறது.

இந்த திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாட்டில் ஆங்காங்கே போராட்டங்கள் தொடர்ந்து நடந்துவருகிறது.

இதையும் படிங்க: 'கம்சனைப் போல் நிதிஷ் குமார் தோற்பார்'- தேஜ் பிரதாப் யாதவ்

ABOUT THE AUTHOR

...view details