அமெரிக்க வர்த்தக சபையுடன் இணைந்து அமெரிக்க-இந்தியா வர்த்தக கவுன்சில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அக்கூட்டத்தில் பேசிய அவர், "வறுமையை வெல்வதற்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது எங்கள் அரசின் முக்கியக் குறிக்கோள். வேலைவாய்ப்புகளை உருவாக்கமால் வறுமையை ஒழிப்பது என்பது முடியாத காரியம். அதனால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சிறு, குறு தொழில்களிலும், வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களிலும் முதலீடு செய்யுங்கள்.
கரோனா பெருந்தொற்று தற்காலிகமானது. அதிலிருந்து மீள்வதற்கும், பொருளாதாரப் போரில் வெற்றிபெறுவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்துவருகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரத்துக்கு மக்கள் கையில் பணப்புழக்கம் இருப்பது முக்கியமானது.