தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வர்த்தகம், போக்குவரத்து ஒப்பந்தங்கள் குறித்து இந்தியா-நேபாளம் நடத்திய ஆய்வுக்கூட்டம்! - வர்த்தக உள்கட்டமைப்பு மேம்பாடு

டெல்லி: வர்த்தகம் மற்றும் போக்குவரத்து தொடர்பாக இந்தியா-நேபாள அரசு அலுவலர்கள், மெய்நிகர் சந்திப்பில் கலந்துரையாடியுள்ளனர்.

காத்மாண்டு
காத்மாண்டு

By

Published : Dec 7, 2020, 6:57 PM IST

இந்தியா-நேபாள அரசு அலுவலர்கள் இடையிலான கூட்டம் மெய்நிகர் சந்திப்பில் இன்று (டிசம்பர் 7) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இரு நாடுகளின் வர்த்தகச் செயலாளர்கள் தலைமை தாங்கினர்.

இக்கூட்டத்தில் இந்திய அரசின் வர்த்தகச் செயலாளர் அனுப் வாதவன், நேபாளத்துக்கான இந்தியத் தூதர் வினய் மோகன் குவத்ரா, நேபாளம் சார்பில் துணை, வர்த்தக மற்றும் விநியோகச் செயலாளர் பைகுந்த ஆர்யல், பல்வேறு அமைச்சகத்தின் பிரிதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இதில், இரு தரப்பினரும் வர்த்தக உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் முதலீட்டு அதிகரிப்பதை குறித்து விவாதித்துள்ளனர். மேலும், கரோனா காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தும், எல்லைகளில் லாரி வழியாகத் தடையற்ற வர்த்தகம் மற்றும் வணிக சரக்கு நடைபெற்றதை குறிப்பிட்டு, இரு நாட்டுச் செயலாளர்களும் ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொண்டனர்.

வர்த்தகம் மற்றும் போக்குவரத்து ஒப்பந்தங்கள் தொடர்பாக ஆய்வுமேற்கொண்டனர். இந்தியாவிற்கும் நேபாளத்துக்கும் இடையிலான பொருளாதாரம் மற்றும் வணிக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது. நேபாளத்தின் ஒரே வர்த்தக பார்ட்னர் இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details