தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியா - நேபாள உறவும்; அதில் சீனாவின் பங்கும்

இந்தியா - நேபாளம் உறவும், இரு நாட்டு உறவில் சீனாவின் தாக்கம் குறித்தும் முன்னாள் தூதர் ஜே.கே திரிபாதி எழுதிய சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம்.

Indo China
Indo China

By

Published : Jul 10, 2020, 3:42 PM IST

நேபாளத்தில் தற்போது உள்ள நெருக்கடிக்கு இணக்கமான தீர்வைக் காணும் பொருட்டு, ஜூலை 8ஆம் தேதி திட்டமிடப்பட்ட நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழுவின் கூட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதன் மூலம் நேபாள பிரதம மந்திரி கட்கா பிரசாத் சர்மா ‘ஒலி’ க்கு மற்றொரு குறுகிய அவகாசம் கிடைத்துள்ளது.

இந்தியாவிற்கும், நேபாளத்துக்கும் இடையில் வளர்ந்து வரும் பதற்றம், சீனாவால் தூண்டப்பட்டதாகத் தெரிகிறது. நாட்டின் உள் விவகாரங்களில் சீனாவின் நடவடிக்கைகள், பொது மக்கள் மற்றும் நேபாள அரசியல்வாதிகளால் அப்பட்டமான தலையீடாக உணரப்படுகின்றன.

நேபாளத்துடனான பல நூற்றாண்டு பிணைக்கப்பட்ட பழைய சிறந்த உறவுகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல், அதன் வெளியுறவுக் கொள்கை தோல்வியுற்றதற்காக இந்திய அரசாங்கமும், எதிர்கட்சிகளால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது. இரண்டு குடும்ப உறுப்பினர்களைப் போல இரண்டு அண்டை நாடுகளும் ஒரே மாதிரியான உறவுகளை என்றென்றும் கொண்டிருக்க முடியாது. சூழ்நிலைகளைப் பொறுத்து அவர்களுக்கு இடையே பதற்றங்கள் சில நேரங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவும், நேபாளமும் இதற்கு விதிவிலக்கல்ல. மன்னராட்சியின் போது, ​​நேபாள மன்னர்கள் இந்தியாவை ஜனநாயகத்திற்கு ஆதரவாக கவிழ்க்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினர். இது கடந்த 1975ஆம் ஆண்டில் சிக்கிம் சந்தித்தது போன்ற நிலையை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சத்தில், அதன் மண்ணில் எந்த இராணுவ போட்டியும் இல்லாமல் நேபாளத்தை "அமைதி மண்டலமாக" அறிவித்தது.

சீனாவும், பாகிஸ்தானும் நேபாளத்தை கவர இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அத்தகைய ஒப்பந்தங்களில் உடனடியாக கையெழுத்திட்டன. இரு நாடுகளுக்கும், இடையே ஏற்கனவே ஒரு விரிவான அமைதி, நட்பு ஒப்பந்தம் இருப்பதாகக் கூறி, இந்தியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டது.

கடந்த 1988ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க நேபாளம் மறுத்ததால், பதற்றங்கள் அதிகரிக்க வழிவகுத்தது, இதன் விளைவாக ஏற்பட்ட பொருளாதார முற்றுகை, கடந்த 1991இல் இரண்டு தனித்தனி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதன் மூலம் மட்டுமே தீர்க்கப்பட்டது.

கடந்த 2015ஆம் ஆண்டில் நேபாள அரசியலமைப்பின் திருத்தம் மாதேசி மக்களை (இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, நேபாளி சமவெளிகளில் குடியேறியவர்கள்) கோபப்படுத்தியபோது இதேபோன்ற நிலைமை ஏற்பட்டது.

கடந்த 1816 ஆம் ஆண்டில், சுகோலியில் கையெழுத்தான பிரிட்டிஷ் இந்தியா-நேபாள ஒப்பந்தத்தில், நேபாளத்தின் மேற்கு எல்லையை காளி நதியின் தோற்றம் வரை வரையறுத்திருந்தது தான் தற்போதைய நெருக்கடிக்கு காரணமான இந்தோ-நேபாள எல்லை தகராறு.

லிபுலேக் பாஸுக்கு அருகே காளி நதி தோன்றியதாக இந்தியா கூறினாலும், நேபாளம் அதன் தோற்றம் லிம்பியாதுராவுக்கு அருகில் மேற்கே உள்ளது என்று வாதிடுகிறது, இதனால் உத்தரகண்டின் ஒரு பகுதியில் அதன் உரிமை கோரலை நேபாளம் முன்வைக்கிறது.

சீன தூதர் ஹூ யான்கி-யுடனான நெருக்கமான உறவுகள் குறித்த விமர்சனங்கள் மற்றும் பரவலான ஊழல் குற்றசாட்டுகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் பொருட்டு, திருத்தப்பட்ட நேபாள வரைபடம் அவசர அவசரமாக பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட பிரதமரான ஒலி முனைந்தார் .

பிரசந்தாவை கட்சியின் இணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு அவர் தயக்கம் காட்டியது போன்ற புரிதல் இருந்தபோதிலும், கட்சியில் ஒலியின் ஆதரவை சிதைத்து விட்டது. இந்தியாவுக்கு எதிரான ஒலியின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் கட்சிக்குள்ளேயே அதிருப்தியை ஏற்படுத்தியது, தலைவர்களை மேலும் கோபப்படுத்தி அவரை கட்சியில் இருந்தும் அந்நியப்படுத்தியது.

அந்த சமயத்தில் ஒலியைக் காப்பாற்றுவதற்கான தனது அயராத முயற்சிகளுடன் ஹூ யான்கி முயன்றார். அதிபர் மற்றும் பிரதமருடனான யான்கியின் ஏராளமான சந்திப்புகளின் போது, ​​அனைத்து அரசு நெறிமுறைகளும் தூக்கி எறியப்பட்டது, கூட்டங்களுக்குப் பின்னால் சாத்தியமான நோக்கங்கள் குறித்த சந்தேகத்தை எழுப்புகிறது.

இந்தியா- நேபாள உறவுகளில் சீனா ஏன், எப்படி தலையிடுகிறது என்று கேட்கலாம். காரணங்கள் வெளிப்படையானவை. முதலாவதாக, சீனா அதன் எல்லை சாலை முன்முயற்சியின் கீழ் வெளிப்படையாக, இலாபகரமான திட்டங்களை, இந்திய முதலீடு மற்றும் உதவியுடன் நேபாளத்திற்கு வழங்குவதன் மூலம் தனது கடன் திட்டத்தை நேபாளத்திற்கு விரிவுப்படுத்த விரும்புகிறது.

இரண்டாவதாக, நேபாளத்தில் சீனா தனது செல்வாக்கை அதிகரிக்க விரும்புகிறது, நேபாளத்தை சீன பாதுகாப்பாக மாற்ற, அதை இந்தியாவிற்கு எதிராக மாற்ற வேண்டும்.

மூன்றாவதாக, பிராந்தியத்தை வளர்க்கும் திறன் கொண்ட நாடு சீனா தான், இந்தியா அல்ல என்ற ஒரு நுட்பமான செய்தியை சார்க்கில் உள்ள மற்ற எல்லா நாடுகளுக்கும் கொடுக்க விரும்புகிறது.

கடைசியாக, நேபாளத்தில் மற்றொரு அமைப்பை கொண்டு வருவதன் மூலம், வர்த்தகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளில் தான் எதிர்கொள்ளும் விமர்சனங்களிலிருந்து, உலகளாவிய கவனத்தைத் திசை திருப்பி இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க சீனா விரும்புகிறது.

சீனாவின் கடனின் சுமையில் நேபாளத்தை நசுக்கி, தான் சொல்வதை செய்வதற்குக் கட்டாயப்படுத்துவதே சீனாவின் செயல்முறையாகும். தற்போது, ​​நேபாளத்தில் உள்ள போக்ராவில் உள்ள ஒரு விமான நிலையம், ஒரு பல்கலைக்கழகம், இந்தோ-நேபாள எல்லை வரை பல சாலைகள், அணைகள் மற்றும் திபெத்தை காத்மாண்டுடன் இணைக்கும் ஒரு மெகா ரயில் திட்டம் உட்பட 6 பில்லியன் அமெரிக்க டாலர் (600 கோடி) செலவாகும் பல திட்டங்களில் சீனா ஈடுபட்டுள்ளது.

நேபாளத்தின் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக உள்ள தற்போதைய சீன கடன், இனி ரயில்வே திட்டம் உட்பட 8 பில்லியன் டாலர்களாக உயரும், இது 2020 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 29% ஆகும்.

சீனாவின் கடன் வலையில் நேபாளம் சீனக் கடன்களைத் திருப்பிச் செலுத்த வாய்ப்புகள் குறைவு. ஆனால் சீனாவின் திட்டம் பின்னடைவைச் சந்தித்தது. சொந்த கட்சியில் ஒலிக்கு கடுமையான எதிர்ப்பு, சீனா தான் பல்வேறு இடங்களில் நேபாள நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளதை வெளிப்படுத்தியது.

பொருளாதார சாத்தியமற்ற ரயில்வே திட்டம்(நேபாளத்தில் பலரால் காகிதத் திட்டம் என்று அழைக்கப்படுகிறது) மற்றும் இந்திய எதிர்ப்பு என்ற பெயரில் சீனாவுடன் நெருக்கமாக இருப்பது போன்றவை அவருக்கு எதிரான போராட்டங்களாக மாறின.

தாமதமாக, நேபாளம் இந்திய எல்லையில் சமீபத்தில் நிறுவிய பல காவல் சோதனை சாவடிகளை அகற்றியதன் மூலம் இந்தியாவுக்கு நெகிழ்வுத்தன்மையைக் காட்டியுள்ளது. எவ்வாறாயினும், கட்சியின் நிலைக்குழு கூட்டம் எப்போது நடக்கிறதோ அந்தக் கூட்டத்திற்குப் பிறகு தான் இருதரப்பு உறவுகளில் உறுதியான போக்கு தெரியும்.

இதையும் படிங்க:நிக்கோலா டெஸ்லா - பிறந்த தினம் இன்று!

ABOUT THE AUTHOR

...view details