உத்தரகாண்ட் மாநிலத்தில், தார்ச்சுலா (Dharchula) - காட்டிமா (Khatima) இடையிலான 300 கி.மீ. தூரம் இந்தியா நேபாளத்துடன் தனது எல்லையை பகிர்ந்து கொள்கிறது .
இந்தியா-நேபாளம் எல்லை 68 மணி நேரம் மூடல்...! - Dharchula
டேராடூன்: மக்களவைத் தேர்தலையொட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இந்தியா-நேபாளம் எல்லைகள் 68 மணி நேரம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
India-Nepal Border
இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலையொட்டி அந்த எல்லையானது ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 11ஆம் தேதி 8 மணி வரை (68 மணி நேரம்) அடைக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இருப்பினும், இந்த தடையானது வெளிநாட்டுப் பயணிகள், நோயாளிகளுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 11ஆம் தேதி, உத்தரகாண்ட் மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.