இந்தியா-நேபாளம் இடையேயான வணிக உறவை மேம்படுத்தும் நோக்கில் இரு நாட்டு எல்லையில் அமைந்திருக்கும் நேபாள்குஞ்ச்சில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைக்கும் பணி இன்று தொடங்கியது. மத்திய அமைச்சர் பியூஸ் கோயலும், நேபாள அமைச்சர் கிருஷ்ண கோபலும் பணியைத் தொடக்கி வைத்தனர்.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்திட்டத்தின் மூலம் எல்லை தாண்டிய சரக்கு லாரிகளின் இயக்கம் முறைப்படுத்தப்படும். இந்தச் சோதனைச் சாவடி செயல்பாட்டிற்கு வரும் வேளையில் ஏற்றுமதி, இறக்குமதி எளிமையாக்கப்படும். மருத்துவ வசதிகள் உடனுக்குடன் கிடைக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்படும். மிக முக்கியமாக அனுமதியில்லாமல் யாரும் இரு நாட்டு எல்லைக்குள்ளும் நுழைய முடியாது. இதனால் தேவையற்ற அசாம்பாவிதங்கள் தவிர்க்கப்படும்.