மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். மத்திய நிதியமைச்சர் சீதாராமன் நாடாளுமன்றத்தில் ஒரு சீரான பட்ஜெட் உரையை நிகழ்த்துவார் என கருதப்படுகிறது.
பட்ஜெட் தொடர்பான அனைத்து விவாதங்களுக்கிடையில், விவசாய பொருளாதார நிபுணர் விஜய் சர்தானா நமது ஈடிவி பாரத்திடம் பேசியபோது, நொறுக்கப்பட்ட பொருளாதாரத்தை விவசாயத்தால் எவ்வாறு புதுப்பிக்க முடியும் என்ற புரிதல், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க உதவும் என்றார்
இதுகுறித்து அவர் நேர்காணலில் பேசியதாவது:
கேள்வி: வரவிருக்கும் பட்ஜெட் தாக்கலில் விவசாயிகள் எதை எதிர்பார்க்கலாம், அரசின் தரப்பில் என்ன நடவடிக்கைகள் தேவை?
பதில்: இப்போது விவசாயத் துறையில், சேமிப்பு தொடர்பான பிரச்னைகளை எதிர்கொள்கிறோம். பயிர் அறுவடைக்கான நேரம் வந்துவிட்டது, இந்திய உணவுத்துறை பண்டகசாலை ஏற்கனவே நிரம்பியுள்ளன. குளிர் சேமிப்பு மற்றும் பண்டக சாலை கட்டுவதற்கு அரசாங்கம் தகுந்த தொகையை ஒதுக்க வேண்டும். இது விவசாய அடிப்படையிலான பல பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கும்.
இரண்டாவதாக, எண்ணெய் இறக்குமதி அதிகரித்துள்ளதால் அரசாங்கம் எண்ணெய் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும். உபரி கோதுமை மற்றும் அரிசி உற்பத்தி தொடர்பாக விவசாயிகளுக்காக ஒரு திட்டம் உருவாக்கப்பட வேண்டும். விவசாயிகள் தங்கள் வருமானத்தை இரட்டிப்பாக்க விவசாயத்திலிருந்து கால்நடை வளர்ப்புக்கு மாற வேண்டும் என்று நமது பிரதமர் கூறி வருகிறார். ஆனால் இந்த நேரத்தில் தீவனம் மற்றும் தீவன பற்றாக்குறை காரணமாக கால்நடைகளை வளர்ப்பது கடுமையாகிவிட்டது. மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளர்ப்பு அமைச்சகம் தொடர்புடைய திட்டங்களை கொண்டு வர வேண்டும்.
ஒட்டுமொத்த உற்பத்தித் திறனையும் மேம்படுத்துவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். குறைந்தபட்ச விலையை ஒவ்வொரு முறையும் அதிகரிக்க முடியாது. ஏனெனில் இது நமது ஏற்றுமதிக்கு தீங்கு விளைவிக்கும். சிறிய அளவிலான விவசாயிகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். வேளாண் துறையில் முன்னேற்றத்தை எதிர்பார்க்க, நாம் வழக்கமான சிந்தனையை விட்டுவிட வேண்டும்
கேள்வி: சிறிய அளவிலான விவசாயிகள் இருப்பதால், பெரிய அளவிலான இயந்திரமயமாக்கல் சாத்தியமில்லை என்று விவசாய அமைச்சகம் கூறுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, நிதி எவ்வாறு ஒதுக்கப்பட வேண்டும்?
பதில்: பயிர் உற்பத்தித் திறனை அதிகரிக்க சரியான உபகரணங்கள், கருவிகள் தேவைப்படுவதால் சிறு அளவிலான விவசாயிகளுக்கு பிரச்னைகள் உள்ளன. ஒவ்வொரு விவசாயியும் நல்ல தரமான விதைகள், உரங்கள் போன்ற பொருட்களை பெறுவதில்லை. நம் நாட்டில் சுமார் 6.5 லட்சம் கிராமங்கள் உள்ளன ஆனால் தரமான பொருட்களை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு அமைப்புகூட இன்னும் இல்லை.
நிதியை நேரடியாக பரிமாற்றம் செய்வது ஒரு இணக்கமற்ற விருப்பமாகும் . ஏனெனில் நிதி தவறாக ஒதுக்கப்படுவதற்கும், பயன்படுத்தப்படுவதற்கும் இது வழிவகுக்கும். அதனால்தான் கடன் தள்ளுபடி வழக்குகள் எழுகின்றன. விவசாயிகளுக்கு நேரடியாக நிதிகளை மாற்றத் தொடங்கும் முன், தூர்தர்ஷன் அல்லது பிற ஊடகங்கள் மூலம் பிராந்திய மொழிகளில் இதனை அறிவிக்க வேண்டும்.
வேளாண் பொருளாதார நிபுணர் விஜய் சர்தானா கேள்வி: 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான இலக்கை நமது அரசு நிர்ணயித்துள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் இந்த இலக்கை அடைய முடியுமா?
பதில்: தற்போதுள்ள சூழ்நிலையில், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க இரண்டு வழிகள் உள்ளன. முதல் வழி உற்பத்தி செலவைக் குறைப்பது, இரண்டாவது வழி அதுகுறித்த புரிதல்களை அதிகப்படுத்துவது.
பாரம்பரிய வழிகள் மூலம் உற்பத்தி செலவைக் குறைக்கவோ, உற்பத்தித் திறனை அதிகரிக்கவோ முடியாது. கலப்பு வேளாண்மை, கரிம வேளாண்மை மற்றும் விவசாய உயிரி தொழில்நுட்பத்தை அரசாங்கம் ஊக்குவித்துவருகிறது. ஆனால் இவை தேவையானவற்றை தருகின்றனவா இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும்.
நம் நாட்டின் விவசாயத் துறை எதிர்கொள்ளும் சவால்கள் மற்ற நாடுகளிலிருந்து மிகவும் வேறுபட்டவை. எனவே, எல்லா சோதனைகளும் கற்பனைக்குரியவை அல்ல. விவசாயிகளின் நலனில் நுகர்வோர்கள் அக்கறை காட்டுவதில்லை. நமது கொள்கைகளில் பெரும்பாலானவை நுகர்வோரை சார்ந்தவை, விவசாயியை சார்ந்தவை அல்ல. அவை மாற்றப்பட வேண்டும். இதற்காக, சந்தைப்படுத்தலில் சீர்திருத்தம் மற்றும் தொழில்நுட்பங்கள் தேவை. இது விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க உதவும்.
இதையும் படிங்க : நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்துவருகிறது - பொருளாதார நிபுணர் ராஜேந்திரகுமார்