ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்துகொண்ட அபிஜித் பானர்ஜி, இந்தியாவுக்கு வலுவான எதிர்க்கட்சி தேவை. ஜனநாயக நாட்டின் இதயமாக விளங்குவது எதிர்க்கட்சிதான், அதனை ஆளுங்கட்சி அரவணைத்து நடக்க வேண்டும் என அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு வலுவான எதிர்க்கட்சி தேவை - அபிஜித் பானர்ஜி - நோபல் பரிசு
ஜெய்ப்பூர்: இந்தியாவுக்கு வலுவான எதிர்க்கட்சி தேவை என பொருளாதார வல்லுநரும், நோபல் பரிசு வென்றவருமான அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேலும் வறுமை நிலை குறித்து அபிஜித், வறுமை என்பது புற்றுநோய் போல... அதில் பல வகைகள் உண்டு. சிலர் படித்த ஏழை, சிலர் சொத்தில்லாத ஏழையாக இருக்கின்றனர். இந்த பிரச்னைகளுக்கு சரியான தீர்வு காண வேண்டும். ஏழைகளிடம் பணம் கொடுத்தால் செலவு செய்துவிடுவார்கள். அவர்களுக்கு ஆடு, மாடு போன்றவற்றை வழங்க வேண்டும். அதன்பிறகு 10 ஆண்டுகளில் அவர்களின் நிலை உயர்ந்துவிடும். அவர்கள் நலமாகவும் மகிழ்ச்சியுடனும் வாழ்வார்கள் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தோடர் இன பழங்குடி மக்கள் கொண்டாடிய 'மொற்ட்வர்த்' விநோத திருவிழா