தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சீனாவிலிருந்து நகரும் ஜப்பான் நிறுவனங்கள்: இந்தியாவுக்கு பலன் தருமா! - Three C model

கரோனா நோய்க் கிருமி பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான ஜப்பானின் செயல்பாடுகளை முன்மாதிரியாகக் கூறலாம். ஜப்பானின் ஹொக்கைடோ பல்கலைக்கழகத்தின் சர்வதேச அரசியல் பேராசிரியர் கசுடோ சுசுகி குழு அடிப்படையில் ஜப்பான் செயல்பட்டது என்று கூறுகிறார். இதற்கிடையில் சீனாவில் இயங்கும் ஜப்பான் நிறுவனங்களுக்கு, வேறு இடங்களில் தங்கள் செயல்பாடுகளை தொடங்க நிதியுதவி வழங்கவும் முடிவெடுத்துள்ளது.

India japan
India japan

By

Published : Jun 4, 2020, 9:27 PM IST

டெல்லி: கரோனா நோய்க் கிருமி பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான ஜப்பானின் செயல்பாடுகளை முன்மாதிரியாகக் கூறலாம் என ஜப்பானின் ஹொக்கைடோ பல்கலைக்கழகத்தின் சர்வதேச அரசியல் பேராசிரியர் கசுடோ சுசுகி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஜப்பான், சீனா மீதான தன்மையை பகுப்பாய்வு செய்யத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் சீனாவிலிருந்து ஜப்பான் நிறுவனங்களின் உற்பத்தியை மாற்றுவதற்காக அதன் நிறுவனங்களுக்கு நிதியளிக்கத் தொடங்கியுள்ளது. இது இந்தியாவுக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

ஜப்பான் கரோனா தொற்றின் தாக்கத்தில் இரண்டாம் இடத்தில் இருந்தது. தற்போது அந்த நிலை மாறி 38ஆவது இடத்தில் இருக்கிறது. இது நோய்த் தாக்குதலுக்கு எதிரான ஜப்பானின் துரித செயல்பாடும், குழுக்களாக பயணித்து நோயை எதிர்த்துப் போராடிய தன்மையையும் வெளிப்படையாக காட்டுகிறது.

ABOUT THE AUTHOR

...view details