'கோவிட் பரவலின்போது இந்தியாவிற்கும் பிரான்சிற்குமான வணிக தொடர்ச்சி' என்ற தலைப்பில் காணொலிக்காட்சி வழியே நடைபெற்ற கூட்டத்தில் மத்திய வர்த்தக, கைத்தொழில் அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "'தன்னிறைவு இந்தியா' திட்டத்தால் (ஆத்மநிர்பார் பாரத் அபியான்) சர்வதேச வர்த்தகத்திற்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது. இத்திட்டத்தால் சர்வதேச வர்த்தகத்திற்கு இந்தியா தடை எதையும் விதிக்கவில்லை.
மாறாக, இந்தியா மற்ற நாடுகளுடன் ஆழ்ந்த வர்த்தக உறவை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறது. சர்வதேச விநியோகச் சங்கிலியில் ஒரு முக்கிய பகுதியாக இருக்க விரும்புகிறோம். சர்வதேச வர்த்தகத்திற்கு நம்பகமான ஒரு பங்காளராகவே இந்தியா இருக்க விரும்புகிறது.
பிரான்சிற்கும் இந்தியாவிற்கும் இடையே எவ்வித போட்டியும் இல்லை, ஆனால் ஒருவருக்கொருவர் உதவிகளை செய்ய விரும்புகிறோம். காலத்திற்கு தேவையான மிக உயர்ந்த தொழில்நுட்ப தயாரிப்புகளை பிரான்ஸ் உருவாக்குகிறது.