சிறுபான்மையினர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு தேசிய சிறுபான்மையினர் ஆணையம் சார்பாக நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடத்தப்பட்டது. இதில், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கலந்துகொண்டார். அப்போது அவர், "நாட்டில் உள்ள இஸ்லாமியர்களும் அவர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டுவருகிறது. எனவே, குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டு அவர்கள் அஞ்ச வேண்டாம்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினர்களுக்கு குடியுரிமை வழங்கவே சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் நலமாக இருந்திருந்தால், இங்கு வருவதற்கு தேவை இருந்திருக்காது. மதச்சார்பற்ற நாடாக இந்தியா திகழ்வதற்கு இந்துக்களே காரணம். இஸ்லாமியர் ஒருவரை கூட நாட்டில் அந்நியராக உணர்ந்ததில்லை. நாட்டின் வளர்ச்சிக்கு மற்றவர்களுடன் சேர்ந்து சிறுபான்மையினர் உழைத்துள்ளனர்.