1947ஆம் ஆண்டு, காஷ்மீருக்குள் அத்துமீறி புகுந்த பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய காலாட்படை சிறப்பாகச் செயல்பட்டு விரட்டியடித்தது. அதன் துணிவை நினைவுகூரும் விதமாக அக்டோபர் 27ஆம் தேதி காலாட்படை தினம் கொண்டாடப்படுகிறது.
காலாட்படையை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி! - பிரதமர் மோடி
டெல்லி: நாட்டைப் பாதுகாப்பதில் காலாட்படை ஆற்றிய முக்கியப் பங்கை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மோடி
இதனை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, நாட்டைப் பாதுகாப்பதில் காலாட்படை ஆற்றிய முக்கியப் பங்கை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது எனத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “துணிவான காலாட்படை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றிய காலாட்படையை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது. அவர்களின் துணிவு கோடிக்கணக்கான மக்களை ஊக்குவிக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
Last Updated : Oct 27, 2020, 5:57 PM IST