தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக மாறும் இந்தியா! - கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக மாறும் இந்தியா

கடந்த ஏழு நாள்களில் அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில்தான் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. இந்த நிலை நீடிக்குமானால், இந்தியா மிக மோசமான ஒரு நிலைக்குத் தள்ளப்படும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

India inches closer to become global hub of coronavirus
India inches closer to become global hub of coronavirus

By

Published : Aug 17, 2020, 11:45 AM IST

உலகில் கரோனா வைரஸ் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா. பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக உள்ளது. ஆசியாவிலேயே தற்போது அதிக கரோனா நோயாளிகளைக் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாதான் முதல் இடத்தில் உள்ளது.

இதில் சிக்கலான விஷயம் என்னவென்றால், கடந்த ஏழு நாள்களாக அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளைவிட இந்தியாவில்தான் அதிக நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது.

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் நாள்தோறும் இந்தியாவில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு

அமெரிக்காவில் நாள்தோறும் கரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. பிரேசிலில் கரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டது. இருப்பினும், இந்தியாவில் கரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. வரும் நாள்களில் இதே நிலை நீடிக்குமானால், இந்தியா மிக மோசமான ஒரு நிலைக்குத் தள்ளப்படும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இந்தியாவில் கரோனா தொற்று இரட்டிப்பாகும் காலம் 24 நாள்களாக உள்ளது. பிரேசிலில் இந்த இரட்டிப்பாகும் காலம் 47 நாள்களாகவும் அமெரிக்காவில் 65 நாள்களாகவும் உள்ளது. இவ்விரு நாடுகளிலும் வைரஸ் பாதிப்புகள் கட்டுக்குள் வந்து விட்டதை இது தெளிவாக உணர்த்துகிறது.

கரோனா இரட்டிப்பாகும் காலம் எவ்வளவு அதிகரிக்கிறதோ, அந்த அளவு கரோனா பரவல் கட்டுக்குள் வந்து விட்டது என்று அர்த்தம். இந்த இரட்டிப்பாகும் காலம் கடந்த சில காலமாகவே அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது. ஆனால், வைரஸ் தொற்று இரட்டிப்பாகும் காலத்தை அதிகரிக்க இந்தியா திணறி வருவது.

அமெரிக்காவில் ஜூலை 22ஆம் தேதி அதிகபட்சமாக 67 ஆயிரம் பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டது. அந்த எண்ணிக்கை தற்போது நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் என்று குறைந்துள்ளது. அதே நேரம் இந்தியாவில் தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக 62 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்படுகிறது.

உயிரிழப்பு விகிதம்

உயிரிழப்பு விகிதத்தைப் பொறுத்தவரை அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளைவிட இந்தியாவில் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளது. அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, பிரேசிலில் உயிரிழப்புகள் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது. அமெரிக்காவில் குறைந்து வருகிறது.

ஆனால் இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும், இதுவரை வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை என்பது அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளைவிட இந்தியாவில் மிகக் குறைவாகவே உள்ளது.

அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு பின் இந்தியாவில் மட்டுமே கரோனா தொற்று காரணமாக 50 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

நாள்தோறும் கரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா விரைவில் முதலிடத்தை பிடிக்கும்.

இதையும் படிங்க: பாஜக, ஆர்எஸ்எஸ் கைகளில் பேஸ்புக், வாட்ஸ்அப் - ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details