இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து, அவசர காலங்களில் பிரச்னைகளை தடுக்க 5400 படுக்கைகளைக் கொண்ட தனிமைபடுத்தும் வசதிகளை தயார் செய்ய மத்திய உள்துறை அமைச்சகமானது மத்திய ஆயுதப்படை காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கோவிட்-19 வைரஸை கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் காவல்துறை படை (Central Reserve Police Force), எல்லை பாதுகாப்பு படை (Border Security Force), மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (Central Industrial Security Force) போன்ற துறைகளிடம் 75 தனிமைப்படுத்தும் வார்டுகளை உருவாக்க உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எல்லைப் பகுதிகள் உள்பட 37 இடங்களில் தனிமைப்படுத்தும் வசதிகளை செய்துதர உள்துறை அமைச்சகமானது மத்திய ஆயுதப்படை காவல்துறையிடம் கேட்டுக்கொண்டது.
இந்தோ-திபெத்திய எல்லை காவல்படைக்கு ஏற்கனவே புது டெல்லியில் உள்ள சவாலா முகாமில் தனிமைபடுத்தும் மையம் இருந்ததாகவும், அங்கு தற்போது 400 பேர் தனிமைபடுத்தப்பட்டதாகவும் தெரிவித்தது. வெளிநாட்டிலிருந்து வருபவர்களிடமிருந்தே வைரஸ் பாதிப்பு இந்தியாவில் பரவுவதால் அவர்களை கையாளும்போது கூடுதல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துகொள்ளுமாறு இந்திய எல்லையை பாதுகாக்கும் துருப்புகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...வெப்பநிலை மாறுபாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவலுக்கும் தொடர்பா?