தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இஸ்லாமியர்களுக்கு இந்தியாதான் சொர்க்கம் - மத்திய அமைச்சர் - India heaven for Muslims

டெல்லி: இஸ்லாமியர்களுக்கு சொர்க்கமாக திகழும் இந்தியாவில் பொருளாதார, மத உரிமைகள் பேணி காக்கப்படுவதாக மத்திய அமைச்சர் நக்வி தெரிவித்துள்ளார்.

நக்வி
நக்வி

By

Published : Apr 21, 2020, 4:12 PM IST

சமய மாநாட்டில் கலந்துகொண்டு கரோனா வைரஸ் நோயை திட்டமிட்டு இஸ்லாமியர்கள் பரப்பியதாக மத உணர்வுகளை தூண்டும் வகையில் ஒரு சிலர் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் சிலர் கருத்து தெரிவிப்பதாக இஸ்லாமிய ஒத்துழைப்பு குழு கவலை தெரிவித்தது.

சிறுபான்மையினர் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் உடனடியாக நடவடிக்கை எடுத்து வெறுப்புணர்வு பரப்பும் சம்பவங்களை தடுக்கவும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்தது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நக்வி, "எங்கள் பணியை நம்பிக்கையின் அடிப்படையில் செய்துவருகிறோம். 130 கோடி இந்தியர்களின் நலன், உரிமை ஆகியவை பிரதமர் உரையில் எப்போதும் இடம்பெற்றிருக்கும். இதனை சிலர் கவனிக்கவில்லை என்றால், அது அவர்களின் பிரச்னை. இஸ்லாமியர்களுக்கு சொர்க்கமாக திகழும் இந்தியாவில் பொருளாதார, மத உரிமைகள் பேணி காக்கப்படுகின்றன.

சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் வளமாக உள்ளனர். அவர்களின் நலனை கலைக்க முயற்சி செய்பவர்கள் இஸ்லாமியர்களின் நண்பர்களாக இருக்க முடியாது. அரசியல் நோக்கத்திற்காக மதச்சார்பின்மை, நல்லிணக்கம் ஆகியவை பின்பற்றப்படவில்லை. இது இந்தியா, இந்தியர்களின் கொள்கையாகும்." என்றார்.

இதையும் படிங்க: அனைத்து செய்தியாளர்களுக்கும் கரோனா சோதனை - டெல்லி முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details