தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியா அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் - பிரகாஷ் ஜவடேகர் - பிரகாஷ் ஜவடேகர் இந்தியா அந்நியா முதலீீடுகள்

டெல்லி : சீனாவிலிருந்து தொழில்சாலைகளை இடமாற்றம் செய்ய முனைப்புக் காட்டும் சர்வதேச நிறுவனங்களை இந்தியா ஈக்கும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

javadekAR
javadekAR

By

Published : May 3, 2020, 12:45 AM IST

இதுகுறித்து அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசுகையில், "கரோனா பெருந்தொற்று காரணமாக சீனாவிலிருந்து தொழிற்சாலைகள் வேறு நாடுகளுக்கு இடமாற்றம் செய்ய சர்வதேச நிறுவனங்கள் முனைப்புடன் உள்ளன. வலிமையான பொருளாதார அடிப்படைகளைக் கொண்ட இந்தியா அந்நிறுவனங்களை ஈர்க்கும்.

இந்தப் பெரும் வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவில் கால்பதிக்க நினைக்கும் பெருநிறுவனங்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆறு வருடத்துக்கு முன்பு நாட்டில் வெறும் இரண்டு செல்போன் தொழிற்சாலைகள் மட்டுமே இருந்தன. தற்போது 150 உள்ளன.

தனிநபர் பாதுகாப்புக் கருவிகள், வென்டிலேட்டர்கள் ஆகியவையும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. ஊரடங்கைத் தொடர்ந்து அனைத்து துறைகளும் முழுவீச்சில் செயல்படும். உள்நாட்டுத் தேவை அதிகம் உள்ளது" எனத் தெரிவித்தார்.

நாட்டில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழலில், மே 3ஆம் தேதியுடன் நிறைவு பெறவிருந்த ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்கள் (மே 17 வரை) நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே ஊரடங்கு காரணமாகச் சொந்த ஊருக்குப் போக முடியாமல் தவித்து வரும் வெளிமாநில தொழிலாளர்களை, அவரவர் மாநிலங்களுக்குத் திருப்பி அனுப்பத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

ஊரடங்கு காரணமாகப் பெருமளவில் வேலை இழப்பு நிகழாது எனவும் அவர் உறுதியளித்துள்ளார். முன்னதாக, ஏழை எளிய மக்கள், வெளிமாநில தொழிலாளர்களுக்கு மத்திய அரசு சார்பில் நிவாரண தொகை வழங்கப்படும் என்றும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் அவர்களுக்கு இலவசமாக கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதையும்படிங்க : சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க அருமையான வாய்ப்பு-நிதின் கட்கரி

ABOUT THE AUTHOR

...view details